அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு 44 லட்சம் மானியம்! – கணபதி ராவ்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு 44 லட்சம் மானியம்! – கணபதி ராவ்

ஷாஆலம், அக். 9-

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 95 தமிழ் பள்ளிகளுக்கு 44 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி முன்னெடுத்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஸாரி கலந்து கொண்டார்.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதி பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகள் இதர மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என மானியத்தை பெற்றுக் கொண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதோடு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் அவர்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்

இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன