ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பழைய துணிகளால் பூச்சாடிகள் தயாரித்த நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பழைய துணிகளால் பூச்சாடிகள் தயாரித்த நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

பினாங்கு, அக்டோபர் 9-

பயன்படுத்திய பழைய துணிவகைகளைக் கொண்டு புதியத் தோற்றமாய் காட்சியளிக்கும் பூச்சாடிகளை தயாரித்த நிபோங் திபால் மாணவர்கள் பல்வேறு தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றிருக்கின்றனர்.

அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தினரின் அறிவியல் தொழில் திறன் அறிமுக நிகழ்ச்சியில் தங்களின் இந்த அரிய வகை கண்டுபிடிப்பினை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு இத்தொழில் திறனை பயிற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கும் அப்பள்ளியின் ஆசிரியை திருமதி ரூபிணி தீபனுக்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் நினைவு பரிசை வழங்கி ஊக்குவித்தார்.

அத்துடன் இத்தொழில் திறனை வெளிக்காட்டி தங்களின் ஆற்றலைப் புலப்படுத்திய மாணவர்களுக்கும் பாராட்டிய அவர் மாநிலத்தில் இந்திய சமூகத்தினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இம்மாணவர்களின் கண்டுபிடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தவ்கே எனப்படும் பயிற்றம் முளை உற்பத்தி முறை, பாத்திரம் கழுவும் திரவம் தயாரிப்பு முதலியவற்றையும் அறிமுகப்படுத்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அதே வேளையில், 87 வயது நிரம்பிய மூதாட்டி அகிலாம்பிகை என்பவர் 10 நிமிடத்தில் எள் உருண்டை பணியாரம் செய்து காட்டிய திறனுக்காக சபையோரால் பாராட்டப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன