ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மை ஸ்கீல் அறவாரியத்தில் பெர்கெசோவின் தீபாவளி கொண்டாட்டம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மை ஸ்கீல் அறவாரியத்தில் பெர்கெசோவின் தீபாவளி கொண்டாட்டம்!

களும்பாங் அக்டோபர் 9-

பெர்கெசோவின் தீபாவளி கொண்டாட்டம் களும்பாங்கில் உள்ள மை ஸ்கீல் அறவாரியத்தில் மிக விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் தமது துணைவியாருடன் கலந்துகொண்டார்.

பெருநாட காலங்களில் வசதி குறைந்தவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பெர்கெசோ ஏற்பாடு செய்த இந்த தீபாவளி கொண்டாட்டம் தொடர வேண்டுமென குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் காலங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சியை பெர்கேசோ நடத்தும் என தமது அதிகாரிகள் கூறிய போது அது மை ஸ்கீல் வாரியத்தில் நடத்தப்படுவது சிறப்பாக இருக்கும் என்ற பரிந்துரையையும் முன்வைத்தனர்.

வசதி குறைந்த 150 மாணவர்கள் படிக்கும் மை ஸ்கீல் அறவாரியத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது சிறப்பு அம்சங்களில் ஒன்று என்ன அவர் விவரித்தார்.

இருளை நீக்கி ஒளி பிறக்கும் இந்த தீபத்திருநாளில் வசதி குறைந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது மிகச்சிறந்தது என்றார் அவர். இதற்கு உறுதுணையாக இருந்த மை ஸ்கீல் அறவாரியத்திற்கும் அதன் தோற்றநர் வழக்கறிஞர் பசுபதிக்கும் தாம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னணி கலைஞரான சித்தார்த்தன் தலைமையில் இசைநிகழ்ச்சி மட்டுமின்றி மை ஸ்கீல் அறவாரியத்தின் மாணவர்களின் படைப்புகளும் வருகையாளர்களை கவர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன