வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், குணசேகரன் கைது!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், குணசேகரன் கைது!

கோலாலம்பூர், அக். 10-

மலாக்கா நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காடிக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் ஆகியோர் இன்று காலை அவர்களது அலுவலகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பேராவில் செயல்படும் இந்திய அரசு சாரா இயக்கத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போராளிகள் விழாவில் இவர்கள் கலந்து கொண்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்த அதிகாரத்துவ அறிக்கையை விரைவில் வெளிவரும் என புக்கிட் அமான் தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயூப்கான் மைதீன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன