வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும்

பினாங்கு, அக்டோபர் 10-

புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் என வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கான பற்பல வசதிகளை நிர்மாணிப்பதில் அதிநவீன நுட்பங்களுடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் தற்போது மக்கள் பல்வேறு துறைகளில் பல்வகையான வசதிகளை எதிர் கொண்டிருப்பது இதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பல்லூடக தொலைத் தொடர்பு தொழில் நுட்ப முறை, அறிவார்ந்த வாகன நிறுத்துமிடங்கள், கமுக்க ஒளிபடக் கருவி வசதி, பொதுப் பேருந்துகளின் மேம்பாடு, துடிம நூல் நிலையங்கள், கதிர் மின்னாற்றால் நுட்பம் போன்றத் துறைகளில் பினாங்கு மாநிலம் துரித வளர்ச்சி கண்டிருப்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

பொது மக்களுக்கான பற்பல வழிகளில் நவீன வசதிகளுடன் மகத்தான சேவைகளை வழங்குவதில் மாநில மாநகராண்மைக் கழகமும், செபராங் பிறை மாநகராண்மைக் கழகமும் விவேகத் திறனுடன் செயல்பட்டு வருகிறதாக ஜெகதீப் சிங் கூறினார்.

மேலும் பல்வேறு மாற்றங்களுடன் மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளும் மேம்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கும் அவர், மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எதிர்வரும் காலங்களில் மேலும் பல வசதிகளை ஏற்படுத்துவதில் மாநில அரசு அக்கறை உணர்வுடன் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன