வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மின்னலின் பசுமை இயக்கத்தின் அடுத்த அதிரடிப் பயணம் சிரம்பானில் தொடர்கிறது
சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னலின் பசுமை இயக்கத்தின் அடுத்த அதிரடிப் பயணம் சிரம்பானில் தொடர்கிறது

கோலாலம்பூர், அக்டோபர் 10-

மின்னலின் பசுமை இயக்கம் நெகிழி பயன்பாட்டைக்  குறைக்கும் நோக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 13ஆம் தேதி சிரம்பான் தெர்மினல் 1-னில் மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.

அறிவிப்பாளர்கள் ஹரி, தெய்வீகன், சசி, கிஷன்ராஜ் ஆகியோர் நேயர்களைச் சந்திக்க வருகிறார்கள். அந்த அதிரடி பயணக் குழுவினரோடு  பாடகர் விவேக் ஜி-யும்  நேயர்களைச் சந்திப்பார்.

இவ்வாண்டு தீபாவளியை ‘பசுமை தீபாவளி’ எனும் கருப்பொருளில் கடமையுணர்வோடு கொண்டாடிக்  கொண்டிருக்கும் மின்னல் எப்.எம், நெகிழிப் பயன்பாட்டைக்  குறைக்கும்  முயற்சியில் களம் இறங்கியுள்ளது.

அதன் தொடர் முயற்சியாக, இந்த வாரம் சிரம்பானில், அதிரடிப் பயண குழுவினர் ஆடல் பாடல் என நேயர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு  போட்டிகளை வைத்து, வெற்றி பெறுபவர்களுக்கு  மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை வழங்கவிருக்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை இன்னும் இரு வாரங்களில் கொண்டாடவிருக்கும் நாம், இந்த இயக்கத்தின் வழி,  பொருட்களை வாங்கும் போது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை உபயோகப்படுத்துவதை ஊக்குவிப்பதே மின்னலின் முக்கிய நோக்கமாகும்.

மின்னலின் பசுமை திட்டம்  குறித்த பதிவுகளை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர விரும்பினால் #gogreendeepavali என பதிவு செய்யலாம். இயற்கையை நேசித்து பசுமையைக் காப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன