வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தளபதி விஜயுடன் இணையும் முகேன் ராவ்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தளபதி விஜயுடன் இணையும் முகேன் ராவ்

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64 எனும் திரைப்படத்தில் பிக் பாஸ் 3இன் வெற்றியாளர் முகேன் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 திரைப்படத்தை இயக்குகிறார்.

இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இவ்வருட தீபத் திருநாளுக்கு தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியீடு காண்கிறது. அடுத்து அவர் நடிக்கும் 64ஆவது திரைப்படத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் முகேன் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் விஜய் நடித்த திரைப்படங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முகேன் ராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன