ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் புதிய நுட்ப இயக்குனர் டுவாய்ன் மில்லர் – டத்தோ எஸ்.எம். முத்து !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் புதிய நுட்ப இயக்குனர் டுவாய்ன் மில்லர் – டத்தோ எஸ்.எம். முத்து !

கோலாலம்பூர், அக்.11-

மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் புதிய நுட்ப இயக்குனராக அமெரிக்காவின் டுவாய்ன் மில்லர் நியமிக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ்.எம் முத்து அறிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திடல் தடப் போட்டிகளில் பரந்த அனுபவம் கொண்டுள்ள மில்லர், தேசிய திடல் தட அணியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கினை ஆற்றுவார் என எஸ்.எம் முத்து நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக உள்ளூர் திடல் தட வீரர்களும், பயிற்றுனர்களும் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த அவர் உறுதுணையாக இருப்பார் என எஸ்.எம் முத்து கூறினார்.

நவம்பர் மாதம் பிலிப்பைன்சில் சீ விளையாட்டுப் போட்டி நடைபெறவிருக்கும்  வேளையில் மில்லரின் வருகை, தேசிய திடல் தட குழுவுக்கு உத்வேகத்தை அளித்துள்ளதாக எஸ்.எம் முத்து கூறினார்.  முதல் ஆறு மாதங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்த மில்லருக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சீ விளையாட்டுப் போட்டி வரை, தேசிய திடல் தட குழுவின் பயிற்றுனர்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாது என எஸ்.எம் முத்து தெரிவித்துள்ளார்.  தேசிய திடல் தட குழுவின் நுட்ப இயக்குனராக பொறுப்பேற்றுள்ள மில்லர் முதல் கட்டமாக அனைத்து திடல் தட விளையாட்டாளர்களையும் சந்தித்து அவர்களுடன் அணுக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவிருபதாக தெரிவித்தார்.

சீ விளையாட்டுப் போட்டிக்கான தயார்நிலையில் தமது தலையீடு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய திடல் தட விளையாட்டாளர்களின் திறமையை மேலும் பட்டைத் தீட்ட தமக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன