ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஈரோ 2020 -க்கு தகுதிப் பெற்ற முதல் அணி பெல்ஜியம் !
விளையாட்டு

ஈரோ 2020 -க்கு தகுதிப் பெற்ற முதல் அணி பெல்ஜியம் !

புரூசெல்ஸ், அக்.11 –

2020 ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெற்ற முதல் அணியாக பெல்ஜியம் விளங்குகிறது. வியாழக்கிழமை  நடைபெற்ற ஐ பிரிவுக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 9 -0 என்ற கோல்களில் சன் மரினோவை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் இண்டர் மிலான் ஆட்டக்காரர் ரொமேலு லுக்காகூ இரண்டு கோல்களைப் போட்டிருக்கிறார்.

இதன் வழி அனைத்துலக ஆட்டங்களில் பெல்ஜியம் அணிக்கு 50 கோல்கள் போட்ட முதல் ஆட்டக்காரராக லுக்காகூ விளங்குகிறார். ஐ பிரிவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சைப்ரசைக் காட்டிலும் பெல்ஜியம் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருக்கிறது. தகுதிச் சுற்றில் இன்னும் மூன்று ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் தொடர்ச்சியாக ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐ பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா, 4 – 0 என்ற கோல்களில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் ஐ பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக தேர்வுப் பெறும் வாய்ப்பை ரஷ்யா கிட்டத் தட்ட உறுதிச் செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன