ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளிக்கு அனைத்துலக ரீதியிலான அங்கீகாரம்!

கூலிம், அக். 11-

கெடா மாநில யூனிகேல் (UNIKL) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக யூரேக்கா புத்தாக்கப் போட்டியில் ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திரு.ரூபேந்திரன் த/பெ சேதுராமன் அவர்கள் தலைமையில் பள்ளியின் மாணவர்கள், செல்வன் திரிவிக்ரம் த/பெ பாலச்சந்தர், டர்ஷனன் த/பெ டேவிட் ஆகியோர் தங்கப் பரிசுப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

அவர்களின் கண்டுப்பிடிப்பான விளையாட்டு மென்பொருள் (Apps), தங்கப் பரிசுப் பெற்றது. இந்த மென்பொருள் மாணவர்களுக்கு பயன் தரக்கூடியது ஆகும். ஆசிரியர் பிரிவில் திரு.ரூபேந்திரன் அவர்களும் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அதோடு, ஜூலை மாதம் நடைபெற்ற உலகளவிலான பி.ஐ.பி கற்றல் கற்பித்தல் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

இவர்களின் வெற்றி பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐயா திரு குமாரசாமி த/பெ இராஜகோபால் அவர்கள் கூறினார். பல தமிழ்ப்பள்ளி புதிய பொருட்கள் அல்லது இருக்கும் பொருள்களை புத்தாக்கம் செய்து சாதனை படைத்து வரும் வேளையில் ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி மென்பொருள் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்தது புதுமை படைப்பு என வர்ணித்தார்.

தொடக்க காலத்திலேயே கணினி துறையில் புலமை வாய்ந்தவரான இவர், பள்ளியில் எந்திரவியல் துறையில் மாணவர்களின் ஆளுமையையும் திறம்பட செய்வதற்கான பல முயற்சிகளில் இறங்கியுள்ளார். இவரின் அடுத்த கட்ட முயற்சியே இதுபோன்ற புத்தாக்கப் போட்டிகள். தானும் அல்லாமல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறார். இவர்களின் சாதனையை இவ்வுலகமே போற்றும் என தலைமை ஆசிரியர் மேலும் கூறினார்.

இந்த வெற்றி அனைவரின் கூட்டு முயற்சியால் உருவான வெற்றி என அவர் மேலும் கூறினார். மேலும், இந்த புத்தாக்க சிந்தனை வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் துணை தலைமை ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், பாலர் பள்ளி வாரியம் மற்றும் முன்னாள் மாணவர் கழகம் ஆகியவற்றுக்கும் தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

இந்நிலையில் கல்வி மற்றும் கற்பித்தல் பிரிவில் ஜெராண்டுட் பஹாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த் ஆசிரியர் ரூபேந்திரன் சேதுராமன், ஜெண்டராட்டா பிரிவு 3 பேராக் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை அர்வீனா சுப்பிரமணியம், ரெம் ஜொகூர் தோட்டத்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை கஸ்தூரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

தொடக்க காலத்திலேயே கணினி துறையில் புலமை வாய்ந்தவரான இவர்கள், பள்ளியில் புத்தாக்கத் துறையில் மாணவர்களின் ஆளுமையையும் திறம்பட செய்வதற்கான பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள் .அவர்களின் கண்டுப்பிடிப்பான விளையாட்டு மென்பொருள் தங்கப்பதக்கத்தைப் பெற்றது. இந்த மென்பொருள் மாணவர்களின் ஆங்கில ஆளுமையை அதிகரிக்கும் வண்ணம் அமைந்து.

பயன் தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. . அதோடு, ஜூலை மாதம் நடைபெற்ற உலகளவிலான பி.ஐ.பி கற்றல் கற்பித்தல் புத்தாக்கப் போட்டியிலும் இவர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.