வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அனுதாபம் தெரிவித்த காரணத்துக்காக கைது செய்ய முடியுமா ? டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி !
முதன்மைச் செய்திகள்

அனுதாபம் தெரிவித்த காரணத்துக்காக கைது செய்ய முடியுமா ? டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி !

கோலாலம்பூர், அக்.13-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக கூறி, டி.ஏ.பி கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பில் ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டதாக விக்னேஸ்வரன் தமது பத்திரிக்கைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதிகளில் ஒன்று என விக்னேஸ்வரன் வர்ணித்தார். உலகம் முழுவதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர். அதன் காரணமாக அவர்களுக்காக பேரணிகளையும், பிரார்த்தனைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்த அனுதாபமே, அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிட காரணமாக அமைகின்றது. ஆனால் அந்த ஆதரவானது அவர்கள் தீவிரவாதிகளையோ அல்லது தீவிரவாத நடவடிக்கைகளையோ ஆதரிப்பதாக அர்த்தமாகது என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

அனுதாபம் கொண்டதற்காக ஒருவரை கைது செய்ய முடியுமா என்றும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.  2009 ஆம் ஆண்டில் நடந்த்த போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக செயல் இழந்து விட்டது. செயலிழந்த ஓர் இயக்கத்தை மீண்டும் ஏன் உயிர்பிக்கப் போகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் கூறினார். தேவைப்பட்டால் மட்டுமே, காவல்துறையினர்  பாதுகாப்பு குற்றங்களுக்கான சட்டமான, சொஸ்மாவை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன