வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > அவதூறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் குலசேகரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

அவதூறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் குலசேகரன்

கோலாலம்பூர், அக்டோபர் 13-

தீவிரவாத கும்பலுடன் தமக்கு தொடர்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களின் பரவிய குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் குலசேகரன் மறுத்திருக்கிறார்.

இம்மாதிரி பொய்யான செய்திகளை பரப்புபவர்களை கைது செய்து கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

புக்கிட் அமான் காவல்துறை பொய்யான தகவல்களை பரப்புவர்களின் மீது எதிராக நடவடிக்கை எடுக்கும். பொய்யான செய்திகளை பரப்புவதால் இனம் மற்றும் மதங்களுகிடையிலான நல்லிணக்கமும் பாதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் வருவதால் இது போன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் குலசேகரன் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். உண்மையான ஆதாரம் இருந்தால் தாமதிக்கப்படாமல் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

குணசேகரன், சாமிநாதன் குடும்பங்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கைது செய்யப்பட்டது அவர்களது குடும்பத்தினரை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், கட்சி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கட்சி தரப்பில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களையும் நியமிக்க விருப்பதாக கூறினார்.

கட்சியின் உதவித் தலைவர் என்ற முறையில், சம்பந்தப்பட்ட தரப்பினர், வழக்கறிஞர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு கட்சி என்னை பிரதிநிதியாக நியமித்துள்ளது. அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு கட்சியின் சார்பில் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் சொன்னார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன