வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > நிதி ஆதரவின்மையால் மதுசூதனின் சமயப் பணியில் தொய்வு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

நிதி ஆதரவின்மையால் மதுசூதனின் சமயப் பணியில் தொய்வு!

பினாங்கு, அக்டோபர் 13-

பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, பகவத் கீதையை கொண்டு ஆன்மீகக் கல்வியும் போதித்து வந்தார் மசூதன் தாஸ். இந்நிலையில், நிதி ஆதரவின்மையால், அந்த மகத்தானச் சேவையை தொடர முடியவில்லை.

GITA எனப்படும் உலக ஒற்றுமை ஆன்மீக சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மதுசூதன் சிறு வயதிலிருந்தே ஆன்மீகத் தொண்டாற்றும் பணிகளை செய்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு அத்தகைய வழியில் சேவையாற்றுவதை  வழக்கமாக கொண்டிருந்தார்.

மும்பை நகரில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லமொன்றை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பேற்று நடத்திய  மாபெரும் தொண்டையும் மதுசூதன் தனித்தே ஆற்றியிருப்பது அவரின் மெய்யான சமயப் பற்றை புலப்படுத்கிறது.

பின்னர் மலேசியாவுக்கு திரும்பி, தனது ஆன்மீகச் சேவையை தொடங்கிய மதுசூதன், கடந்த 2014ஆம் ஆண்டில் பெருந்தகை சிலரது ஆதரவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை நூலை இலவசமாக வழங்கி அதன் வாயிலாக ஆன்மீகக் கல்வி போதிப்பதை ஒரு கடமையாக கொண்டார்.

இந்நிலையில் போதிய நிதியாதரவின்மையால் தனது ஆன்மீகக் கல்வி போதனையை தொடர இயலாத அவல நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

அரசாங்கத்தின் வாயிலாக நிதியாதரவு கோரும் முயற்சியும் பலனளிக்காததால் அவர் மிகுந்த கவலையில் இருக்கிறார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்மீகக் கல்வி புகட்டும் மதுசூதனின் முயற்சிக்கு ஊக்கமளிக்க விரும்பும் அன்பர்கள் அவரின் 012-6124841 என்ற கைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அவரது உயரிய சேவைக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பகவத் கீதை நூல்களை தனது பணிமனையில் சேகரித்து வைத்திருக்கும் மதுசூதன்,அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்கும் சேவையை தொடர்ந்திட ஆர்வம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன