வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஆர்.ஓ.எஸ். குறிப்பிட்டதைப்போல தேர்தல் நடைபெறும்! – டத்தோ மெக்லின் டி குரூஸ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஆர்.ஓ.எஸ். குறிப்பிட்டதைப்போல தேர்தல் நடைபெறும்! – டத்தோ மெக்லின் டி குரூஸ்

கோலாலம்பூர் அக். 13-

ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் தேசிய பதிவிலாகா குறிப்பிட்டதைப் போல மைபிபிபி கட்சியின் தேர்தல் நடத்தப்படும் என டத்தோ மெர்லின் டி குரூஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தங்கள் மேற்கொண்ட மேல்முறையீட்டை பரிசீலனை செய்து கட்சியின் பதிவை ரத்து செய்யாமல் தற்காத்த உள்துறை அமைச்சருக்கும் சங்கங்களின் தேசிய பதிவிலாகாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

ஆர்ஓஎஸ் வழங்கிய கடிதத்தில் யாருடைய பதவியும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பட்டியலிட்ட 32 பேர் மூன்றாம் தரப்பை நியமித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்சி தேர்தலை நடத்தி உட்பூசல்கள் தீர்வு காண வேண்டுமென மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் டான்ஸ்ரீ கேவியஸ் தம்மை தலைவர் என்று கூறிக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை என டத்தோ மெக்லின் டி குரூஸ் குறிப்பிட்டார்.

மைபிபிபி கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனால் டான்ஸ்ரீ கேவியஸையும் அழைத்து கட்சி தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர் தேர்தலுக்கான சந்திப்பு கூட்டத்தை நடத்தினால் அதில் கலந்துகொண்டு கட்சியின் பிரச்சினையை தீர்ப்பதற்கும் நாங்கள் தயார்.

ஆனால் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் டத்தோ மெக்லின் டி குரூஸ் தெரிவித்தார். மைபிபிபி கட்சியில் தேர்தல் நடைபெறும் அதில் அவரது தலைமையிலான அணி வெற்றி பெற்றால் அவரை கட்சியை வழி நடத்தட்டும். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இனியும் இப்பிரச்சனையை வளர்க்காமல் கட்சியை காப்பாற்ற அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம் என்றும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன