மலேசிய ஐயப்பா சேவை சங்கம் அகில பாரத ஐயப்ப தர்ம பிரச்சார சபை இணைந்து நடத்திய ”சபரிமலை காக்க சரணகோஷம்” எனும் நிகழ்ச்சியை மிக விமர்சையாக நடந்தது.

பத்துமலை அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் நடந்த இந்த கலந்துரையாடல் சிறப்பு பூஜையில் 400க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கேரளா மற்றும் தமிழ் நாட்டு ஐயப்ப பக்தர்கள் மலேசிய ஐயப்ப பக்தர்களோடு இணைந்து சபரிமலை காக்க சரணகோஷம் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் முன்னாள் சபரிமலையின் மேல் சாந்தி தாமோதரன் போத்தி தலைமையில் படி பூஜை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் மற்றும் சிறப்பு படி பூஜையின் முதன்மை நோக்கத்தை மலேசிய ஐயப்பா சேவை சங்கத்தின் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் விளக்கினார்.

நீதிமன்றம் தீர்ப்பு விதித்தாலும் இந்துக்கள் இன்னமும் ஆகம முறையை கடைப்பிடிக்கிறார்கள். இதனால் ஐயப்ப சுவாமியின் ஐதிகம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதாக ஐயப்ப தாஸ் தெரிவித்தார். இந்நிலையில் நவம்பர் மாதம் பத்துமலை ஐயப்ப தேவஸ்தானத்தில் சபரிமலை பூஜைகள் சிறப்பாக நடைபெறும் என யுவராஜா தெரிவித்தார்.