வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா, அக்டோபர் 13-

2020 வரவுசெலவுத்திட்டம் பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்களின் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த நிதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார ரீதியில் நாம் மேம்படும் போது நமது சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதன் அடிப்படையில் தங்களின் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 2 கோடி நிதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்றார் அவர்.

அந்நிதியை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இப்போதே அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஆவணங்களை முறைப்படுத்திக் கொண்டு இந்த கடன் உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என டாக்டர் சேவியர் கேட்டுக்கொண்டார்.

அதே தருணத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்காக 5 கோடி வெள்ளியை ஒதுக்கி இருக்கின்றது.

இதனை தமிழ்ப்பள்ளிகளும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் உள்ள வாரியங்கள் இந்த நிதியை பெறுவதற்கான வழிமுறைகளை உடனடியாக கண்டறிந்து அதற்கான செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என டாக்டர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

மித்ரா விற்கு 2020 ஆம் ஆண்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியையும் முறையாக விண்ணப்பம் செய்து சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என பட்ஜெட் குறித்து தமது கருத்தை பகிர்ந்துகொண்ட கோல லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன