வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > எந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

எந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர், அக்டோபர் 13-

நாட்டில் வளர்ச்சியில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் ஆதரவால் அரசாங்கம் மாற்றத்தை கண்டது. ஆனால், ஒவ்வொரு மாற்றத்திற்கு கால அவகாசம் தேவை. உடனடியாக மாற்றத்தைக் காண முடியாது என நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மாற்றத்திற்கான முயற்சியில் அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், உடனடி மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பது சற்று வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.

எதற்கும் ஒரு கால அவகாசம் தேவை. நிச்சயம் எதிர்பார்த்த மாற்றத்தை இந்த ஆட்சியில் காணலாம். எனவே, இந்திய சமூகம் பொருமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சனிக்கிழமை நடைபெற்ற லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் 10ஆம் ஆண்டு தீபாவாளி கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதனிடையே நிகழ்வில் கலந்து கொண்ட லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர்  டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறுகையில், அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை, சாலை நெரிசல், வர்த்தக ரீதியாக அரசின் கொள்கை மாற்றம் என பல பிரச்னைகளை லெபோ அம்பாங் வர்த்தகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் மேம்பாட்டு பணிகள் காரணமாக சாலைகள் சிறயதாக்கப்பட்டதால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே. இந்த விவகாரத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஹாஜி ரசூல் கேட்டுக் கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாலிக் ஸ்ட்ரீம்  நிறுவனர் டத்தோ மாலிக் கலந்து கொண்டார். டிஎச்ஆர் புகழ் கவிமாறன், தமிழ் நாட்டுப் பாடகர்களான வேல் முருகன், அனிதா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு படைப்புகளை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன