சனிக்கிழமை, நவம்பர் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்! – டான்ஶ்ரீ கேவியஸ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்! – டான்ஶ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர், அக் 14-

மை பிபிபி கட்சியை இனி யாரும் பிரித்தாள முடியாது. கட்சியில் இணைய வேண்டும் கட்சியின் மேம்பாட்டில் துணைபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக தம் அருகில் வந்து அமரலாம் என டான்ஸ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்களை குழப்பிக் கொண்டு தலைமைத்துவத்தில் அமர வேண்டுமென திட்டமிடுபவர்களின் கனவு ஒரு நாளும் பலிக்காது.

ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்களின் தேசிய பதிவு இலாகா அனுப்பிய கடிதத்தில் 2014-2019 ஆம் ஆண்டு உச்ச மன்றம் தேர்தலை நடத்த வேண்டும் என கூறி இருக்கின்றது. அத்தருணத்தில் தாம்தான் கட்சியின் தேசிய தலைவராக இருந்ததால் கட்சியின் விதிமுறைகளை பின்பற்றி இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்தப்படுமென டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

மெக்லின் டி குருஸ் தலைமையிலானவர்கள் கட்சிக்காக தேர்தலை சந்திக்கத் தயார் என கூறியுள்ளது குறித்தும் கேவியஸ் பதிலளித்தார்.

கட்சியின் விதிமுறையின்படி தாம் தான் உச்ச மன்றக் கூட்டத்தை கூட்ட முடியும் என அவர் கூறினார். அதோடு கட்சியின் தலைமைச் செயலாளர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் தலைவருக்கு தான் உண்டு என அவர் தெரிவித்தார்.

மை பிபிபி கட்சியில் நடந்த உட்பூசல் காரணமாக அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ் அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் கட்சி தேர்தலை நடத்தி உட்பூசல்கள் தீர்வு காண வேண்டுமென ஆர்ஓஎஸ் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஓ.எஸ். குறிப்பிட்டதைப்போல தேர்தல் நடைபெறும்! – டத்தோ மெக்லின் டி குரூஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன