வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு
சமூகம்

கலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு

பினாங்கு, அக்டோபர் 14- 

பினாங்கில் கலை ரஞ்சினி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு சிறப்பாக நடைபெற்றது.

இன்னிசை மழையுடன், பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற இந்தக் கலை நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய மெல்லிசைப் பயணம் குழுவின் பிரதிநிதிகளாக, திரு அஜீஸ், திரு லுக்காஸ், திரு மகேன், திரு ரவி மற்றும் திருமதி மேரி ஆகியோரின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியில், மூத்தக் கலைஞர்கள் பலரின் தெவிட்டாத கானங்கள், ரசிகர்களின் இதயங்களை குளிர வைத்த வேளையில், புதியக் கலைஞர்களின் படைப்புகள் சிறப்பாக இருந்தன.

பினாங்கு மாநிலத்தில் நீண்ட கால இசைப் பயணத்தின் வாயிலாக, ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் தங்களின் கலைத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் கலை ரஞ்சனி இசைக் குழுவினர். தங்களின் வழக்கமான பீடுநடைப் பயணத்தின் வாயிலாக,  அண்மையில் இங்கிருக்கும் கொம்தார் அரங்கத்தில், இன்னிசையால் ரசிகர்களை இன்பத்தில் நனைய வைத்தனர்.

உடல் நலிவடைந்திருக்கும் நாட்டின் மூத்தப் பாடகர் மனோராஜ் என்பவரின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னிசை கலைஞர்கள் யாவரும் இலவசமாகவே கலைப்பணி ஆற்றி ஆதரவுக்கரம் நீட்டினர். இதன் வாயிலாக அன்றைய தினம் 4 ஆயிரம் ரிங்கிட் திரட்டப்பட்ட வேளையில், பெருந்தகை ஒருவர் வெ.1,000யை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பான அறிவிப்பு பணியை வெளிப்படுத்தி வரும் கவிதா வீரமுத்து எனப்படும் தமிழ்ப்பள்ளி ஆசிரியருக்கு ஏற்பாட்டுக் குழுவினர் ‘செந்தமிழ்ச் செல்வி’ எனும் விருதினை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன