வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு

பினாங்கு அக்டோபர் 15-

பினாங்கு மாநில குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையினர் அண்மையில் இங்கிருக்கும் ஜெயா உணவக வளாகத்தில் “தீபாவளி ஒன்றுகூடல்” நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர்.

தீபாவளி மகிழ்ச்சியை ஏழைக் குடும்பங்களுடனும் ஆதரவற்ற சிறுவர்களுடனும் பகிரும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர் மோகன் நடராஜா, இங்கிருக்கும் ஷான் ஆதரவற்ற சிறுவர் இல்லம், செஷாயர் சிறுவர் இல்லம், ஸ்ரீ சஹாயா சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா இல்லம் ஆகிய 4 சிறுவர் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 80 சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் மாநிலத்தில் வறுமை நிலையில் வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வரும் 20 ஏழை இந்தியக் குடும்பங்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் பண முடிப்பையும் வழங்கி குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையினர் வழங்கினர்.

ஆண்டுதோறும் தீபாவளி தொடர்பில் ஏழை இந்தியக் குடும்பங்கள் சிலவற்றுக்கு புத்தாடைகள் வழங்கி ஆதரவளிக்கும் தங்களின் வழக்கமான கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி, ஆதரவற்ற சிறுவர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வை நடத்தியதாக மோகன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன