வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைதானவர்கள்: இலவசமாக களமிறங்கும் மஇகா வழக்கறிஞர்கள்…

கோலாலம்பூர், அக். 15-

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை காரணம் காட்டி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 6 இளைஞர்களுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் வழக்கறிஞர்கள் இலவசமாக வாதாடுகிறார்கள் என வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்தார்.

இதனிடையே புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கலை முகிலனின் குடும்பத்தாருடன் போலீஸ்காரர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். கலைமுகிலன் உட்பட பாலமுருகன், ஶ்ரீதரன் ரங்கன் என்ற இளஞ்செழியன், மைக்கல் என்ற திரன், தங்கராஜ், பூமுகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இலவச வழக்கறிஞர்களை பெற மஇகா தலைமையகத்தை நாடலாம் என்றும் ராஜசேகரன் கூறினார். கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதோடு வழக்கறிஞர்கள் இலவசமாக வாதாட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று ராஜகசேகரன் கேட்டுக் கொண்டார். இச்சூழ்நிலையில் கலை முகிலனின் மனைவி தமிழ் மலர், தமது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் போலீசாரின் விசாரணைக்கு முழ ஒத்துழைப்பு வழங்குவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் எனக்கூறி ஜனநாயக செயல் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன