வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ
சமூகம்

ஏழைகளுக்கு உதவ வரும் வெளியூர் சேவகர்களுக்கு விசா கெடுபிடிகள் வேண்டாம் – ஜெகதீப் சிங் டியோ

பினாங்கு, அக்டோபர் 16-

பினாங்கு மாநிலத்தில் Little Sisters Of The Poor எனப்படும் ஆதவற்றோர் இல்லத்தில் தொண்டாற்றுவதற்கு  வெளியூர்களிலிருந்து வரும் சேவகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. உள்துறை அமைச்சும் குடியுரிமைத் துறையும் கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவதற்கு வெளியூர்களிலிருந்து தொண்டர்கள் வருகின்றனர். அவர்களுக்கு விசா வழங்குவதில் இருக்கும் கெடுபிடிகளை தளர்த்தி சம்பந்தப்பட்ட அவ்விரு அரசு அமைப்புகளும் உதவ வேண்டுமென்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இந்த இல்லத்தில் அடைக்கலம் புகுந்திருக்கும் முதியப் பெண்களுக்கு பல்வேறு வழிகளிலான சேவைகள் தேவைப்படுகிறது. அவற்றை ஆற்றுவதற்கு தன்னார்வத் தொண்டர்கள் வரவேற்கப்படுவதை உத்தேசித்து, வெளியூர் நபர்களுக்கு வழிவிடும் வகையில் அரசு இவர்களுக்கு துணை நிற்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

பினாங்கு மாநிலத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு அந்த இல்லத்தில் தாராள உணர்வோடு சேவையாற்றுவதற்கு அயல் நாட்டவர்கள் பலர் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களின் பக்க பலமான  பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரத்தில் விசா ரீதியிலான கெடுபிடிகள் தளர்த்தப்படுவதன் மூலம், அத்தகைய நபர்களின் வருகையில் நிலவும் சிக்கல்கள் நீங்குமென்று தாம் நம்புவதாக ஜெகதீப் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன