வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்பள்ளி மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்

கிள்ளான் அக். 16-

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமை என்றுமே பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியர்களாகிய நாமும் இந்நாட்டின் குடிமக்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தொழிலதிபரும் சமூக சேவையாளர் மான டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தெரிவித்தார்.

தீபத் திருநாளை முன்னிட்டு சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் படிக்கும் 1998 மாணவர்களுக்கு தீபாவளி பண முடிப்பை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்வி சார்ந்த முறைகளில் அரசியல் என்றும் நுழையக்கூடாது அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றார் அவர். முன்னதாக இந்நாட்டில் தமிழ்ப்பள்ளியில் நிலைத்திருப்பது மலேசிய தமிழர்களின் அடையாளமாக விளங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியா மூவின மக்கள் வாழும் உன்னத நாடு. நாம் ஒன்றாக வாழ்வது தான் நமது அடையாளம். இதில் நமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற பரிந்துரை இனியும் எங்கும் எழக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தீபத் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட தாம் அனைவருக்கும் தீபாவளி பண முடிப்பை வழங்கியதாக குறிப்பிட்டவர், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார். இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன