வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்

கோலாலம்பூர், அக்டோபர் 17-

பாட்டாளி மக்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு தொடர்ந்து பாடுபட்ட ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

இன்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

2010ஆம் ஆண்டு தொடங்கி ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவராக இருந்த டத்தோ சம்பந்தன், 2018 ஆம் ஆண்டு மேலவை உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இதயக் கோளாறு காரணமாக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென காலமானது கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி மலேசிய மக்களையும் வெகுவாக பாதித்தது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஷாகித், அம்னோ துணைத் தலைவரும் நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் ஆசான் உட்பட பல தலைவர்கள் டத்தோ சம்பந்தனின் நல்லுடல் அஞ்சலி செலுத்தினர்.

மஇகா தலைவரும் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், உதவித் தலைவர்களான டத்தோ டி மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

காஜாங் செமினி உட்பட கோல லாங்காட் ஆகிய வட்டார மக்களின் மேம்பாட்டிற்கு டத்தோ சம்பந்தன் அயராது பாடுபட்டார். அதோடு தேசிய நிலையிலும் ஐபிஎப் கட்சியை மேம்படுத்துவதற்கு அவரின் உழைப்பு அளப்பரியது என கோலா லாங்காட் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும்சிலாங்கூர் மாநில துணைச் செயலாளருமான டாக்டர் செல்வா தனது இரங்கலை பதிவு செய்தார்.

இன்று மதியம் டத்தோ சம்பந்தனின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் சடங்கும் நடந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன