வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

14 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், அக்டோபர் 18-

2005ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூலை மாதம் வரை கடலோர பகுதிகளில் 66 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

இதற்கு 5 கோடியே 49 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும் 2,887.63 எக்டர் நிலப்பரப்பில் அவை நடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரம் நடும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள காடுகள் சார்ந்த அமைப்புகள் பெரிதும் துணை புரிந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீடு மறு நடவுக்கு மட்டுமின்றி சதுப்பு நிலம் மற்றும் பொருத்தமான உயிரினங்களின் சாகுபடி அதோடு பராமரிப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நடவடிக்கைகள் உட்பட கண்காணிப்பு மேம்பாட்டு திட்டங்கள் பொது விழிப்புணர்வு ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டதாக டாக்டர் சேவியர் குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் அறிந்த படி 15 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட சுனாமி சோகத்தை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கோலா மூடா கடற்கரை பகுதியில் மத்திய அரசு கடல்சார் காடுகளைப் பாதுகாக்கும் நடைமுறையை முன்னெடுத்தது.

சுகாய் மர்போ சுற்றுலா வளாகத்தில் நேற்று சர்வதேச கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தின் தேசிய அறிமுக விழாவில் அவர் இதனை தெரிவித்தார். இந்த விழாவில் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீரும் கலந்து கொண்டார்.

இதனிடையே விலைமதிப்பற்ற இயற்கை முதலான காடுகளை பாதுகாப்பதற்கு கெடா மாநில அரசு என்றும் துணை புரியும் என முக்ரிஸ் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன