வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒரு மாதத்திற்கு ஐபிஎப் கட்சியின் நிகழ்வுகள் ரத்து

கோலாலம்பூர், அக்டோபர் 18-

ஐ.பி. எப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் மறைந்தது கட்சி தொண்டர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அன்னாரின் மறைவையொட்டி இம்மாதம் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என கட்சியின் தகவல் பிரிவு தலைவர் திரு.குமரேசன் சங்கரபாணி தெரிவித்தார்.

ஆகவே, இனி 1 மாத காலத்திற்கு கட்சியின் நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும் என தலைமையக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த நிகழ்வாக இருந்தாலும் அவை அனைத்தும் அடுத்த மாதம் 15/11/2019 தேதி வரை ஒத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது குறித்து மேல் விபரங்களுக்கு 0174889167 (திரு.ச.குமரேசன்)  என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன