வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வசதி குறைந்த 35 குடும்பங்களுக்கு பேரின்பம் இயக்கத்தின் தீபாவளி உதவி
சமூகம்முதன்மைச் செய்திகள்

வசதி குறைந்த 35 குடும்பங்களுக்கு பேரின்பம் இயக்கத்தின் தீபாவளி உதவி

கோலாலம்பூர், அக். 19-

பத்து கேவ்ஸ்சை சேர்ந்த வசதி குறைந்த 35 குடும்பங்களுக்கு பேரின்பம் மலேசியா இயக்கம் உதவிக் கரம் நீட்டியுள்ளது. அடுத்த வாரம் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு ‘புசாட் பக்காயான் ஹரி ஹரி’ கடையில் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிபடுத்தியிருக்கின்றனர்.

இது குறித்து பேரின்பம் மலேசியா இயக்கத்தின் செயலாளர் குபேரன் கூறுகையில், பி40 பிரிவின் கீழ் இருக்கும் 35 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேருக்கு இந்த உதவியை வழங்கியதாகவும். மற்றவர்களை போன்று வசதி குறைந்தவர்களும் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 6 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இத்திட்டத்தை பேரின்ம்பம் மலேசியா இயக்கம் தொடர்ந்து செய்து வரும். இது போன்று மற்ற இயக்கத்தினரும் அரசு சாரா இயக்கங்களும் வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பேரின்பத்தின் ஆலோசகரும் தோற்றுநருமான யு. தாமோதரன், மஇகா கோம்பாக் தொகுதித் தலைவர் சுகுமாறன், செயலாளார் கோபி, பத்துகேவ்ஸ் ஜயப்பன் கோவில் தலைவர் யுவராஜ் ஆகியோர் ஆதரவு வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன