வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்- டத்தோஸ்ரீ ஜீ.வி.நாயர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்- டத்தோஸ்ரீ ஜீ.வி.நாயர்

பத்தாங் காலி, அக். 19-

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் வாசிப்பு பழக்கம் குறைத்துக் கொண்டே வருகிறது. தினமும் வாசிக்கும் பழக்கத்தை பெற்றோரும் ஆசிரியரும் மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தொழிலதிபரும் சமூக சேவையாளருமான டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் தெரிவித்தார்.

நம்மிடையே இருக்கும் வாசிப்பு பழக்கம் நம் சமுதாய எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். அவர்கள் எழுதும் நூல்களை வாங்கி படிக்கும் வாயிலாக நம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதோடு எழுத்தாளர்கள் எழுத்து துறைகளில் நீடித்திருக்கும் வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

மாணவர்கள் மட்டுமின்றி நம் சமுதாயத்தினர் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது நூலகத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். வீட்டிலும் சிறு நூலகம் வைத்திருப்பது அவசியமாகும் என்றும் அவர் சொன்னார். சிலாங்கூர் அரசு பொது நூலகத்துகடன் சூப்பர் மைண்ட் டைனமிக் கல்வி இயக்கத்தின் ஏற்பாட்டில் நூலகம் நோக்கி எனும் நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எழுத்தாளர்களின் 40 புத்தகங்கள் பொது நூலங்கங்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எழுத்தாளர் மு.கணேசனின் ‘நிழலின் நிறம் வெள்ளை’ எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர் முரளி, பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் ராஜமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு உலு சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன