வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கில் ஏழாம் ஆசிய அமைதிவாரி பசிபிக்கு நகர்ப்பறக் கருத்தரங்கு
சமூகம்

பினாங்கில் ஏழாம் ஆசிய அமைதிவாரி பசிபிக்கு நகர்ப்பறக் கருத்தரங்கு

பினாங்கு, அகடோபர் 19-

பினாங்கில் அண்மையில் நடைபெற்ற ஏழாம் ஆசிய அமைதிவாரி பசிபிக்கு நகர்ப்புறக் கருத்தரங்கில் பல்வேறு  நாடுகளின் பிரதிநிதிகளாக ஏறத்தாழ 7,000 பேராளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு மத்தியில் உள்ளூர் பேராளர்களாக, நாட்டின் மத்திய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் சிலரும், அரசியல் பிரமுகர்கள் பலரும், மாநகராண்மைக் கழகத் தலைவர்களும் அவற்றின் உறுப்பினர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் சர்வதேச ரீதியாக பற்பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக, மாநில வீடமைப்பு ஊராட்சி மன்றம் மற்றும் நகர வளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரமுகர்களில் பலர், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பில் தத்தம் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதே வேளையில், தங்களின் அபிப்பிராயங்களையும் உள்ளடக்கி, உரை நிகழ்த்தியிருப்பதும் மனநிறைவை அளிப்பதாக ஜெகதீப் வரவேற்பு தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் அபரிமித வளர்ச்சித் திட்டங்களால் ஒவ்வொரு நாடும் சிறந்த வகையில் மேம்பாடு காணும் என்பதை ஆமோதிக்கும் வகையில், இக்கருத்தரங்கின் பிரமுகர்கள் பலர் தங்களின் ஆணித்தரமான கருத்துக்களை முன் வைத்திருப்பது தொடர்பிலும் ஜெகதீப் நன்றி பாராட்டினார்.

சர்வதேச ரீதியாக நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு, பினாங்கு மாநிலம் தலைமையேற்றது தொடர்பிலும் பெருமிதம் கூறிய அவர், மாநிலத்தில் நிகழ்ந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மாறுதல்களால், மக்களின் வாழ்க்கை முறையில் வசதிகளும் சௌகரியங்களும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகுந்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன