வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரவாங் இந்தியர் வர்த்தகர் சங்கத்தின் தீபாவளி சந்தை தொடங்கியது
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ரவாங் இந்தியர் வர்த்தகர் சங்கத்தின் தீபாவளி சந்தை தொடங்கியது

ரவாங், அக்டோபர் 19-

ரிபாஸ் எனப்படும் ரவாங் இந்தியர் வர்த்தகர் சங்கத்தின் தீபாவளி சந்தை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

ரவாங் அதிகமான இந்தியர்கள் வாழும் பகுதி. தீபாவளி சமயங்களில் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை ரவாங்கிலேயே வாங்கி கொள்வதற்கு ரிபாஸ் இந்த தீபாவளி சந்தையை ஏற்பாடு செய்தது.

ரவாங் ஹொங் லியோம் வங்கியின் பின்புறம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு 17 தீபாவளி சந்தைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீபாவளி சந்தையை செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லோவ் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட், ரிபாஸ் தலைவர் நாராயண மூர்த்தி, போலீஸ் அதிகாரி கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தீபாவளி சந்தை குறித்து வில்லியம் லோவ் கூறுகையில், இங்குள்ள இந்தியர் மக்களின் நலனை கருத்தில் தீபாவளி சந்தையை ரிபாஸ் ஏற்பாடு செய்தது பாராட்டுத்தக்கது. இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த தீபாவளி சந்தை மக்களின் தொடர் ஆதரவால் ஒவ்வோர் ஆண்டும் நடத்த தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து சுவா வெய் கியாட் கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருநாள் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் சந்தைகளும் துணைப் புரியும். வியாபாரம் செய்வதற்கும் இது சரியான நேரமாகும். கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு வியாபாரச் சந்தையில் தொழில்நுட்ப ரீதியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ரிபாஸின் முயற்சிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இங்கிருக்கும் மக்கள் பெருநாள் காலங்களில் வெளியிடங்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதை விட இங்குள்ள தீபாவளி சந்தையில் பொருட்களை வாங்குவதால் அவர்களின் நேரம் மிச்சமாகிறது. அதோடு இங்கு வியாபரம் செய்யும் வியாபாரிகளுக்கும் இது சிறந்த தளமாக அமைகிறது. ரிபாஸின் செயற்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த தீபாவளி சந்தை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதன் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன