சனிக்கிழமை, நவம்பர் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > புக்கிட் ஜம்புல் பேரங்காடியில் வண்ண ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி
சமூகம்முதன்மைச் செய்திகள்

புக்கிட் ஜம்புல் பேரங்காடியில் வண்ண ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி

பினாங்கு, அக்டோபர் 19-

தீபாவளி மகிழ்ச்சி ஆதரவற்ற சிறார்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில், இங்கிருக்கும் புக்கிட் ஜம்புல்  பேரங்காடி மைய நிர்வாகத்தினர் “வண்ண ரங்கோலி கோலமிடுதல்” நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த வண்ணமிகு கோலமிடுதல் நிகழ்ச்சியில் ஆதரவற்ற சிறார்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் இத்தருணத்தில் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

புக்கிட் ஜம்புல் பேரங்காடி மையத்தின் தலைவர் டத்தோ ஜுகால் கிஷோர், வணிகப் பிரிவின் தலைவர் கே.எச்.சான் ஆகிய இருவரும் தங்களின் ஊழியர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

ஸ்ரீ சஹாயா ஆதரவற்ற சிறுவர்களுக்கு தீபாவளிக் களிப்பினை ஏற்படுத்திய புக்கிட் ஜம்புல் பேரங்காடி மைய நிர்வாகத்தினர், நாட்டிலுள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் தங்களின் தீப ஒளித் திருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன