சனிக்கிழமை, நவம்பர் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு இந்து இயக்கம், இந்து அற வாரியத்தின் சைவ சித்தாந்த வகுப்பு
சமூகம்

பினாங்கு இந்து இயக்கம், இந்து அற வாரியத்தின் சைவ சித்தாந்த வகுப்பு

பினாங்கு, அக்டோபர் 19-

பினாங்கு இந்து இயக்கமும், பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் இணைந்து நடத்திய, இந்து சமயத்தின் சைவ சித்தாந்த வகுப்பின் 3ஆம் கட்ட விளக்கவுரை சிறப்பாக நடந்தது.

‘சங்கரதத்னா தமிழ் சிவபூசகர்’ ஆர்.சண்முகம் அவர்களால் வழி நடத்தப்பட்ட இந்த சைவ சித்தாந்த வகுப்பு, மாநில இந்து அறப்பணி வாரிய மண்டபத்தில் நடைபெற்றது. வாரியத் தலைவர் டத்தோஎம்.ராமச்சந்திரன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

சமயச் சொற்பொழிவாளர் சண்முகம், இந்து சமயம் குறித்த “குரு பரம்பரை” தொடர்பில் விளக்கவுரை நிகழ்த்தினார். அறுபத்து நான்கு சிவதிருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் தட்சிணாமூர்த்தியின் மகிமையை எடுத்துரைத்தார்.

சைவ சமய நூல்கள் தொடர்பிலும் உரையாற்றிய அவர், சைவத் திருமுறை நூல்கள் பற்றியும் இந்து சமய வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

நாயன்மார்கள் இந்து சமய வாழ்க்கை நெறியின், ஈடில்லா வழிகாட்டல்களாக துணை நிற்பதை இந்துக்கள் யாவரும் அறிதல் வேண்டுமெனவும் சண்முகம் இந்த விளக்கவுரை நிகழ்ச்சியில் அறிவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன