புக்கிட் ஜாலில், அக் 22-

அருளொளி சங்கீர்த்தனம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தேசிய பஜனை போட்டியில் தெய்வகானம் அணி முதல் நிலை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டாம் நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா பஜன் அணியும் மூன்றாம் நிலை வெற்றியாளராக ஸ்ரீ சாந்தாஸ் அணியும் வாகை சூடினர்.

பொதுமக்கள் வழங்கிய மகத்தான ஆதரவின் அடிப்படையில் இந்த போட்டி உலகளாவிய நிலையில் நடத்தப்படும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சங்கீர்த்தனம் இயக்கத்தின் புரவலருமான குணராஜ் தெரிவித்தார்.

மாலை 6 மணி தொடங்கி இரவு 1 மணி வரை இந்த போட்டி நடந்தாலும் பொதுமக்கள் இறுதி வரை இருந்து வெற்றியாளர்களை பாராட்டி சென்றனர்.

முதல்நிலை வெற்றியாளருக்கு10,000 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் நிலை வெற்றியாளராக 5000 வெள்ளியும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் 4ஆம் நிலை வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் 5ஆம் நிலை வெற்றியாளருக்கு 1,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இதனிடையே புக்கிட் ஜாலில் தீபாவளி சந்தை மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜெகராவ் தெரிவித்தார். ஏஜெண்டா சூர்யா ஏற்பாடு செய்துள்ள இந்த தீபாவளி சந்தையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.