புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பேட்டராப் இசை நிகழ்ச்சி சாதனை படைக்கும்! – பென்னி டயால்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பேட்டராப் இசை நிகழ்ச்சி சாதனை படைக்கும்! – பென்னி டயால்

அரெனா குளோபல் இன்டர்நேஷனல் ஏற்பாட்டில் பென்னி டயால் – ஆண்ட்ரியா பங்குபெறும் பேட்டராப் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி குறித்த அறிமுக விழா அஜெண்டா சூர்யாவின் தீபாவளி சந்தையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடந்தது.

இதில் பாடகர் பென்னி டயால் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த இசை நிகழ்ச்சி இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாடகி ஆண்ட்ரியாவுடன் தாம் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருப்பதால் தங்களின் இரண்டு குழுக்களும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் சிறந்த படைப்பினை வழங்குவோம் என அவர் உறுதியளித்தார்.

60 வெள்ளியிலிருந்து தொடங்கி இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. செராஸ் பி ஜி ஆர் எம் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மிகப் பெரிய இசைக் குழுவினரும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன