புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பசுமை தீபாவளியோடு ‘கலக்கல் தீபாவளி’ கலை நிகழ்ச்சி
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

பசுமை தீபாவளியோடு ‘கலக்கல் தீபாவளி’ கலை நிகழ்ச்சி

புக்கிட் ஜாலில், அக்டோபர் 23-

நெகிழி பயன்பாட்டைக்  குறைக்கும் மின்னலின் பசுமை இயக்கம், அடுத்த கட்டமாக புக்கிட் ஜாலில் கார் நிறுத்தும் வளாகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இம்முறை சற்று மாறுப்பட்டு,  ‘கலக்கல் தீபாவளி’  எனும் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கும்  ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது.

இந்த கலை நிகழ்ச்சியில், சமீப காலமாக நமது அனைவரின் மனங்களை கொள்ளைக் கொண்ட நாயகன்’ முகேன் ராவ்’ சிறப்பு தோற்றத்தில் வந்து மக்களை சந்திக்கவிருக்கிறார்.

அதோடு அறிவிப்பாளர்கள் தெய்வீகன், சுகன்யா, ஹரி , திரேசா ஆகியோரின் அறிவிப்புகளின்  இடையில், லோரன்ஸ் சூசை இசையில், பிரபல கலைஞர்கள் சந்தேஷ், ஷாமினி, தார்ச்சாயினி, சித்தார்த்தன் ஆகியோர் பாடல்களைப் பாடி அசத்தவிருக்கின்றனர்.

தி ஆமோ மற்றும் விஹாரா ஆர்ட்ஸ் குழுவினரின் நடனமும் கலை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட விருக்கிறது.

மாலை மணி ஏழு தொடக்கம், அறிவிப்பாளர்கள் ரவின், சத்தியா, பார்வதியோடு சேர்ந்து மின்னலின் புதிய அறிவிப்பாளர்களான பருவின்ராஜ், கிஷன் ராஜ், அஸ்வினி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெரும்  நேயர்களுக்கு  நெகிழிப் பைகளைப்  பயன்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை வழங்கவிருக்கின்றனர். இந்த அதிரடி பயணக் குழுவினரோடு  சேர்ந்து TROOP SENGET குழுவினர், புதிய கலைஞர்களான  விவாஷன், விஷாக் ஆகியோர் பாடல்கள் பாடவிருக்கின்றனர். இந்த அதிரடி பயணத்தின் தயாரிப்பாளர் சரிதா முனியாண்டி

இவ்வாண்டு தீபாவளியை ‘பசுமை தீபாவளி’ எனும் கருப்பொருளில் கடமையுணர்வோடு கொண்டாடிக்  கொண்டிருக்கும் மின்னல் எப்.எம், நெகிழிப் பயன்பாட்டைக்  குறைக்கும்  முயற்சியில் களம் இறங்கியுள்ளது என மின்னல் எப்.எம்-மின் நிகழ்ச்சி பிரிவு பொறுப்பு அதிகாரியும், பசுமை திட்டத்தின் பெறுப்பாளருமான கலைவாணி சண்முகம் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன