புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்

கோலாலம்பூர், அக்டோபர் 24-

இவ்வாண்டு தீபாவளி முன்னிட்டு கஷ்டப்படும் 5 குடும்பங்களைத் தேர்தெடுத்து அவர்களுக்கு உதவும் நோக்கில் கடந்த சனிக்கிழமை 19-ஆம் தேதி லுலு ஹைப்பர் மார்கெட் எனும் இடத்தில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அகிலா மக்களிடமிருந்து உணவுப் பொருட்கள், அரிசி, குளிர் பானங்கள், ‘பிஸ்கேட்’, குழந்தைகளுக்கான பால் மாவு போன்ற பொருட்களைத் திரட்டினார்கள்.

திரட்டிய அப்பொருட்களை கடந்த திங்கட்கிழமை 21-ஆம் தேதி ராகா குழுவினர்கள் அக்குடும்பங்களைக் நேரில் சந்தித்து வழங்கினார்கள். இம்முயற்சிக்கு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, ஜெய் இசைமைப்பில் வந்தாச்சு நமக்கு தீபாவளிஎனும் தலைப்பில் இவ்வாண்டுக்கான தீபாவளி பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள். SYOK செயலி வாயிலாக மலேசியர்கள் ராகாவை எங்கு இருந்தாலும் எப்பொழுது வேண்டுமின்றாலும் கேட்டு மகிழலாம்.

மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை அல்லது ராகாவின் முகநூலை வலம் வருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன