புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மின்னலின் குதுகலமான தீபாவளி நிகழ்ச்சிகள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மின்னலின் குதுகலமான தீபாவளி நிகழ்ச்சிகள்

 கோலாலம்பூர், அக்டோபர் 24-

தீபாவளியை முன்னிட்டு மின்னலில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. 25ஆம் தேதி, காலை கதிரில், பசுமை தீபாவளி ஆவணத் தொகுப்பு காலை மணி 8.40க்கு ஒலியேறும். இந்த வருடத்தின் மின்னலின் பசுமை தீபாவளி கருப்பொருளுக்கு ஏற்றவாறு, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் மின்னல் எப்.எம்.ஈப்போ, சிரம்பான், பினாங்கு, புக்கில் ஜாலில் வருகை புரிந்த  நேயர்களுக்கு பசுமை பைகளை வழங்கியது.

அங்கு வந்திருந்த நேயர்களின் சந்திப்பை காலை கதிரில் கேட்கலாம். அதனை தொடர்ந்து, சரஷ்வதி கண்ணியப்பன் தயாரிப்பில்,  அக்டோபர் 25ஆம் தேதி இரவு 10.15க்கு, தேடலும் தெளிவும் நிகழ்ச்சியில் “ஒளி விளக்கு” எனும் தலைப்பில் பல சுவராசியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள போகிறார் பிரபல பேச்சாளர் பாண்டிதுரை.

தீபாவளி முதல் நாளன்று, அக்டோபர் 26ஆம் தேதி, மின்னலின் மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணன் தயாரிப்பில், பிற்பகல் மணி 12.03 தொடக்கம் இரண்டு மணி வரை சிறப்பு மண்ணின் நட்சத்திரம் நிகழ்ச்சி இடம்பெறும்.

நம் நாட்டின் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மண்ணின் நட்சத்திரம் தீபாவளி பாடல் காணொளியில் நடித்திருந்த கலைஞர்களின் சிறப்பு சந்திப்பும், பிக் பாஷ் புகழ் முகேன் ராவ் அவரின் அமர்களமான சந்திப்பையும் நேயர்கள் கேட்கலாம். அதே வேளையில், சனிக்கிழமை பிற்பகல் மணி 2.15 தொடங்கி “பாட்டியுடன் பாரம்பரிய தீபாவளி” சிறப்பு செல்லமே செல்வமே நிகழ்ச்சி ஒலியேறும்.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நளினி அச்சுதன். அறிவிப்பாளர் ரவினுடன் ஆனந்த தேன்காற்றில் நடிகர் விக்ரம் பிரபுவுடனான தீபாவளி கொண்டாட்டம் மாலை மணி 6 தொடங்கி இரவு 7 மணி வரை ஒலியேறும். குணசுந்தரி நாகராஜா தயாரிப்பில் இசை சொல்லும் கதை “ நேசமுடன் கொண்டாடுவோம்” இரவு 7.15 மணிக்கு ஒலியேறும். இரவு 10.15 தொடக்கம் ஜோகூர்பாருவில் நடைபெற்ற மின்னலின் சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சியின் ஒலிப்பதிவின் பாடல்களை நேயர்கள் கேட்கலாம். பிரேமா கிருஷ்ணன் தயாரிப்பில், நம் நாட்டு கலைஞர்களின் படைப்புகள் நேயர்களை மகிழ்ச்சி படுத்தும்.

தீபாவளி அன்று, அக்டோபர் 27ஆம் தேதி, உதயகாலத்தில், காலை மணி 4.30க்கு தொடக்கம் பட்டுக்கோட்டை SKT இராஜேந்திரன் குழுவினர் மங்கள இசை, கண்ணன் போற்றி பாடல்கள் காலை மணி 5க்கு ஒலியேறும். காலை மணி 11.30க்கு குதுகலமான ISAI.MY தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இடம்பெறும். இரவு 7.30 மணிக்கு வே.தங்கமணி எழுதிய “மேல்நாட்டு மருமகள்” வானொலி நாடகம் தாயரிப்பாளர் பார்வதி நாகராஜா தயாரிப்பில் இடம்பெறும். மின்னலின் அன்பான நேயர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன