வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி திரைப்படங்கள், உள்ளூர் நிகழ்ச்சிகள்
கலை உலகம்

துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி திரைப்படங்கள், உள்ளூர் நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி அலைவரிசை 241இல் அக்டோபர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு சிந்துபாத் திரைப்படம் ஒளியேறும்.  தீபாவளியன்று ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசை 231இல் பிற்பகல் 12 மணிக்கு மான்ஸ்டர், இரவு 9.00 மணிக்கு 2.0 ஆகிய திரைப்படங்கள் ஒளியேறும். மறுநாள் 28ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நட்பே துணை மற்றும் இரவு 9.00 மணிக்கு அய்ரா ஆகிய படங்களை இவ்வாண்டு தீபாவளிக்குக் கண்டு மகிழலாம்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவின் விண்மீன் எச்.டி. அலைவரிசை 231இல் பல அதிரடியான சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கிறது. ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231இல் வலம் வருகின்றது.

பால கணபதி இயக்கத்தில் உருவான அடாவடி தீபாவளி – பாகம் 1 27ஆம் தேதியும்  பாகம் 2 28ஆம் தேதியும் ஒளிபரப்பாகும். நகைச்சுவை நிறைந்த இந்நாடகத்தில் பிரபல நம் உள்ளூர் கலைஞர்களான சங்கீதா, சத்தியா, சசி குமார் ஆகியோருடன் வளர்ந்து வரும் கலைஞர்களான ஹேமா, சுபாஷினி மற்றும் அருண் நடித்துள்ளார்கள்.

 

ஸ்ரீ சோனிக் மற்றும் காயத்ரி தொகுத்து வழங்கும் சவாலுக்கு ரெடியா எனும் நிகழ்ச்சி 27ஆம் தேதி மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பல அரிய பரிசுகள் தட்டிச் செல்லும் கேம் ஷோ ஆகும்.

 

மலேசியர்களை நேர்காணல் செய்து யார் சிறந்த கோலிவுட் நடிகர் என ஆராயும் நிகழ்ச்சியான யார் உங்கா கோலிவுட் கிங் மாலை 7.30க்கு ஒளிபரப்பாகும்.

பாலகணபதி தொகுத்து வழங்கும் ரசிக்க ருசிக்க சீசன்  நிகழ்ச்சி 27ஆம் தேதி இரவு 9ஆம் தேதி ஒளிபரப்பாகும். மலேசியாவிலுள்ள சிறந்த வாழை இலை உணவுகள் கொண்ட உணவகங்களின் தகவல்களை இந்தத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் கண்டு அறிந்து கொள்ளலாம்.

இதனிடையே, 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஸ்ரீ சோனிக் தொகுத்து வழங்கும் பக்கா லோக்கல் இந்நிகழ்ச்சியில் மலேசியா முழுவதும் உள்ள சிறந்த உணவகங்களில் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன