திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இல்லாமை இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம்..!
சமூகம்முதன்மைச் செய்திகள்

இல்லாமை இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம்..!

இன்று நிறைந்திருக்கும் தீபத்தின் மங்களம் எங்கும் தங்கி இந்த தீபத் திருநாளில் அனைவர் வாழ்விலும் நன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று பினாங்கில் செயல்பட்டு வரும் யமுனாஸ் கேட்டரிங் & யமுனாஸ் எண்டர்பிரைஸ் உரிமையாளர் மு. வேலாயுதம் தெரிவித்தார்.

இதுபோன்ற பெருநாள் காலங்களில் இல்லாதவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கும் உதவிட முன்வர வேண்டும் என்று அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

வாழ்கை செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் வசதிப் படைத்தவர்கள் தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இவ்வேளையில் ஏழ்மையில் வாடும் வசதி குறைந்தவர்களை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், மலேசிய இந்தியர்கள் வர்த்தக ரீதியாக மட்டுமல்லாமல், ஒற்றுமை மற்றும் நல்லிணகத்துடன் இணைந்து மேம்பாடு காண வேண்டும் என்றும் வேலாயுதம் கேட்டுக்கொண்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன