வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தின் உடல் மீட்பு
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தின் உடல் மீட்பு

திருச்சி, அக்டோபர் 29-

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் 4 நாட்களுக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

நேற்று இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார்.  இதனால் குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடல் மீட்பது குறித்து மீட்புபடையினரின் தகவல் குறித்து அடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட்டு வந்த 80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது அனைத்து தரப்பு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் முடிந்து சுஜித்தின் உடல் இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. இறுதிசடங்குகளுக்கு பிறகு சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன