அஸ்காபாட், அக்டோபர் 29-

தமது பிரதமர் பதவியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றமே தீர்மானிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை தாமே பிரதமராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தாகவும் அதுவே அவர்களின் விருப்பமாகும் என்றும் கூறினார்.

இதனை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றமே தீர்மானிக்கும் என்று துர்க்மெனிஸ்தானிற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அம்னோவின் 6 மக்களவை உறுப்பினர்கள் துன் மகாதீரே பிரதமராக நீடிக்க வேண்டுமென கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர், துன் மகாதீர் நியமிக்கப்படுவார் என்றும் அதன் பின்னர் அப்பதவி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கபடும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், இது எப்போது நடைபெறும் என்பது குறித்து கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1 COMMENT

  1. என்னை தங்களின் ஆனேகன் புலனத்தில் இணைத்து கொள்ளே முடியுமா

Comments are closed.