கோலாலம்பூர், அக்டோபர் 31-

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வீ ஜெக் செங்கிற்கு பாஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அதன் தலைமைச் செயலாளர் தக்யுடின் ஹசான் கூறியுள்ளார்.

இதனை பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கும் வரவேற்பதாக தக்யுடின் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்வரும் 2ஆம் தேதி சனிக்கிழமை பொன்தியான் ஜூபில் இந்தான் சுல்தான் இப்ராஹிம் மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. வீ ஜெக் செங்கிற்கு ஆதரவாக பாஸ் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.