புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இவ்வாண்டின் மிகப் பெரிய இசை திருவிழா! – சாதனை படைக்கவிருக்கும் மோஜோ!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இவ்வாண்டின் மிகப் பெரிய இசை திருவிழா! – சாதனை படைக்கவிருக்கும் மோஜோ!!

மலேசியாவில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தனி முத்திரை பதிப்பதில் மோஜோ நிறுவனம் தனக்கான அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த 3ஆண்டு காலமாக மோஜோ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.

அண்மையில் ரெட்ரோ ரஹ்மான் 2 இசை நிகழ்ச்சியை நடத்தியபோது இந்நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் நவம்பர் 23ஆம் தேதி தமிழகத்தின் முன்னணி இசை கலைஞர்களான ஹரிச்சரண், சுவேதா மோகன், சக்திஶ்ரீ கோபால், நிக்கில் மேத்தியூ, ரக்‌ஷிதா, மாளவிகா ஆகியோருடன் ராஜேஷ் வைத்தியாவுன் கலந்து கொள்கிறார். இன்டோ சோல் இசை குழுவும் இதில் பங்கேற்கிறார்கள். இது அட்டகாசமான இசை திருவிழாவாக அமையவிருக்கின்றது.

மோஜோ படைக்கும் இவ்வாண்டின் மிகப் பெரிய இசை நிகழ்ச்சியாக இது அமையவிருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற, மசாலா காபே, தாய்குடம் பிரிச், விஜய் பிரகாஷ், பாடகர் கார்த்திக் இசைக்குழு, அலாப் ராஜூ இசைக்குழு, சிட் ஸ்ரீராம் போன்ற முன்னணி கலைஞர்களை கொண்டு மோஜோ இசை இந்நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் மோஜோ தனி முத்திரை பதித்துள்ளது. குறிப்பாக 1 மணி நேரம் இடைவிடாது வீணை வாசித்து ராஜேஷ் வைத்தியா இந்த அரங்கில் உலகச் சாதனையும் படைக்கவிருக்கின்றார். இது காணக் கிடைக்காத காட்சியாக அமையவிருக்கின்றது.

கடந்த நிகழ்ச்சியின் போது இறுதி நேரத்தில் டிக்கெட்களை வாங்கலாம் என நினைத்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் முன்கூட்டியே டிக்கெட்களை வாங்கிக் கொள்ள வேண்டுமென நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ரத்னகுமார் நினைவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன