விசாரணைக்கு நான் தயார்! ஹிசாமுடின் துன் உசேன்

கோலாலம்பூர், நவ. 4-

தம் மீது சுமததப்ப்ட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிசாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

”அரசு என் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கின்றது.” ”இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் நான் தைரியமாக பதில் அளிப்பேன்”. என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார்.

நீல இடமாற்று, மெக்டோனல்ஸ், ஹெலிகாப்டர் என எந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை செய்யும் அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பேன் என முன்கூட்டியே நான் கூறிவிட்டேன் என்று ஹிசாமுடின் தெரிவித்தார்.

மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையம் அம்னோ உறுப்பினரை விசாரிக்கிறது என முன்னாள் செனட்டர் ஏசாம் முகமட் நோர் குறிப்பிட்டது குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் தற்காப்பு அமைச்சின் நிலங்களை உள்ளடக்கிய நில இடமாற்றம் குறித்து ஹிசாமுடின் துன் உசேன் ஏழு மணி நேரம் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.