செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பூனையைக் கொன்ற வழக்கு: கணேஷிற்கு 34 மாத சிறை! 40,000 அபராதம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பூனையைக் கொன்ற வழக்கு: கணேஷிற்கு 34 மாத சிறை! 40,000 அபராதம்

செலாயாங், நவ. 5-

சலவை இயந்திரத்தில் பூனையை உலர்த்தி கொன்ற குத்தகை தொழிலாளி கணேஷ் (வயது 42) என்பவருக்கு செலாயாங் செக்க்ஷன் நீதிமன்றம் 34 மாத சிறை தண்டனையும் 40 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி ரஸ்ஹியா ரசாலி தெரிவித்தார்.

பூனையை சலவை இயந்திரத்திற்குள் போட்டு துணி துவைப்பது போல் அதை துன்புறுத்திய வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் கணேஷ் என்பவருக்கு 34 மாத சிறை தண்டனையும் 40 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது சிறை தண்டனை இன்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். கணேஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இனி விலங்குகளை யாரும் துன்புறுத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும் என நீதிபதி குறிப்பிட்டார்.

இருப்பினும் கணேசன் வழக்கறிஞர் எஸ் மது வீரன் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அதன்பிறகு தண்டனை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் செக்ஷன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கணேஷின் ஜாமீனை RM12,000லிருந்து RM20,000 ஆக உயர்த்தியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 12.54 மணிக்கு இந்த குற்றத்தை பத்துவேன்ஸ் கோம்பாக் என்னும் இடத்தில் கணேஷ் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன