செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் : குணசேகரனின் வழக்கு தள்ளுபடி
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் : குணசேகரனின் வழக்கு தள்ளுபடி

கோலாலம்பூர், நவ. 6-

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை சிரம்பான் செக்சன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குணசேகரன் தனது அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அக்டோபர் 10ஆம் தேதி காலை 9 52 மணிமுதல் 11.50க்குள் இந்த குற்றங்களை அவர் தாமான் சிரம்பான் ஜெயா வில் புரிந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆர் எஸ் என் ராயர் தலைமையிலான 4 வழக்கறிஞர்கள் குழு அவருக்காக களமிறங்கினர்.

இதனிடையே கடந்த அக்டோபர் 31ம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைவருமான குணசேகரன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ள பட்டதன் காரணமாக குணசேகரனின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நடவடிக்கையை முன்னெடுத்த வழக்கறிஞர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வழக்கறிஞர் ராயர் தெரிவித்தார்.

இதே நடவடிக்கை இந்த வழக்கு விசாரணையில் கைதுசெய்யப்பட்டுள்ள மற்றவர்களுக்கும் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார். இதில் ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான குலசேகரன் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன