புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ரஜினியின் தர்பாரில் கமல்ஹாசன்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ரஜினியின் தர்பாரில் கமல்ஹாசன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி பட நட்சத்திரங்கள் திரள்கின்றனர். இது சமீபத்தில் அவருக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு விருதுக்கான விழா அல்ல ரஜினி நடித்து வரும் தர்பார் படத்துக்கான தடபுடல் ஏற்பாடு ஆகும்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இதில் நயன்தாரா, யோகி பாபு. நிவேதா தாமஸ், தம்பி ராமையா, ஸ்ரீமன், பிரதீக் பாபர், ஜடின் சமா, நவாப் ஷா, தலிப் தாஹித் நடிக்கின்றனர்.

அனிரூத் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே தர்பார் படத்தின் பர்ஸ்ட் லக், செகண்ட் லுக் என ரஜினியின் ஸ்டைலான ஸ்டில்கள் வெளியிடப்பட்டன தற்போது  இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தி மொழியில் சல்மான் கான் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) வெளியிடுகின்றனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன