ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆசிய சாம்பியன்சிப் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி; 4 தங்கங்களை வென்று சங்கீதா சாதனை
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசிய சாம்பியன்சிப் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி; 4 தங்கங்களை வென்று சங்கீதா சாதனை

கோலாலம்பூர், நவம்பர் 7-

ஆசிய சாம்பியன்சிப் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த ஆர்.சங்கீதா 4 தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்துள்ளார்.

அண்மையில் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் இந்த ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 4 பிரிவுகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி 4 தங்கப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 400 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

பூச்சோங்கைச் சேர்ந்த சங்கீதா (வயது 11) 4 ஆண்டுகளுக்கு முன்னரே போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்த சங்கீதா ஆசியா ஐஸ் ஸ்கேட்டிங் நிறுவனத்தில் 8 இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சங்கீதா கூறுகையில், உலகளவில் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை புரிந்தவர்களை பார்க்கும் போது ஊக்குவிப்பாக இருக்கும். தென்கொரியாவைச் சேர்ந்த கிம் யூனா எனது முன் உதாரணமாக கருதுகிறேன். விண்டர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே எனது லட்சியமாகும் என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன