கோலாலம்பூர், நவ.7-

1எம்டிபி நிதி முறைக்கேடு தொடர்பாக தேடப்பட்டுவரும் வர்த்தகர் ஜோ லோவை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில், அவருக்கு அடைக்கலம் தரும் நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டால் மலேசியாவிற்கே இழப்பு ஏற்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதற்கு மலேசியா பலமான நாடு அல்ல என்பதையும் அரசாங்கம் நன்கு உணர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாம் சம்பந்த நாடுகளுடன் மோதலில் ஈடுபடலாம். ஆனால், நாம் தோல்வி கண்டு விடுவோம். இறுதியில் ஜோ லோவைப் பெறுவதையும் இழந்து விடுவோம்.

அந்நாடுகள் சில நேரங்களில் நம்முடன் நல்லவர்களாக இருப்பார்கள். சில, நேரங்களில் அதற்கு எதிர்மாறாகவும் இருப்பார்கல். அதனை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ லோவை நாட்டிற்கு அழைத்து வருவது எளிதானது இல்லை என்றாலும், அதற்காக, கடும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவர் பயணக் கடப்பிதழைக் கொண்டிருப்பதாகவும் முகம் மாற்று செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும், அவை எல்லாம் ஆதாரங்கள் இல்லாத ஆருடங்களாகவே உள்ளது எனவும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.