புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > முன்னாள் தலைவரை ஏன் கேள்வி கேட்கவில்லை!- துன் டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

முன்னாள் தலைவரை ஏன் கேள்வி கேட்கவில்லை!- துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், நவ. 7-

சட்டத்துறை தலைவர் டாமி தாமஸ் போக்கை குற்றம்சாட்டுவது பதிலாக கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி எதனால் தோல்வி கண்டது என்பதை முதலில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் அமிடி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது முன்னாள் தலைவர் (டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்) கடந்த காலத்தில் பணத்தை கையாடல் செய்தார். அவரை அகமட் ஸாஹிட் ஏன் குறை கூறவில்லை என மகாதீர் கேள்வி எழுப்பினார்.

மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்னதாக உங்களை நீங்களே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். கடந்த பொதுத் தேர்தலில் ஏன் தோல்வி கண்டீர்கள் என்பதை முதலில் ஆராயுங்கள் என குறிப்பிட்டார்.

உங்களில் தலைவரின் தவறுகளை சுட்டிக்காட்ட தவறியதால் தான் நீங்கள் தோல்வி கண்டீர்கள்! என தேசிய கலை கலாச்சார பாரம்பரிய கலைக்கூடத்தின் 15ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சோங் பியா இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின்போது அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் நம்பிக்கை கூட்டணி அரசாங்கமும் சட்டத்துறை தலைவர் டாமி தாமஸும் சட்டத்தை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த பிரதமர் தேசிய முன்னணியின் தோல்வியை முதலில் ஆய்வு செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன